ADDED : மார் 16, 2025 07:00 PM

வேண்டாமே சாபம்
தனக்கு யாராவது தீமை செய்து விட்டால் போதும். உடனே வருத்தத்தில் 'இவன் எல்லாம் நல்லா இருப்பானா... இவன் குடும்பம் நாசமாகி விடும்' என பலர் சாபம் கொடுக்கிறார்கள். உண்மையாக அந்த நேரத்தில் இந்த மனநிலையே இருக்கும். ஆனால் இது தவறு என்கிறார் நபிகள் நாயகம்.
'பிறரை சபிப்பவர்கள் கியாமநாளில், பிறருக்காக பரிந்துரை செய்பவர்களாகவோ இறைநேசர்களாகவோ இருக்க மாட்டார்கள். உன்னை வெறுப்பவன் மீது நேசம் கொள். உனக்கு இல்லை என்று சொல்பவனுக்கு கொடு.
உனக்கு அநியாயம் செய்பவனை மன்னித்து விடு. மீஸான் என்னும் தராசில் நல்ல குணத்தை விட விசேஷமானது வேறில்லை. நல்ல குணத்துடன் வாழ்ந்தால் சொர்க்கத்தில் உள்ள மாளிகையை உனக்கு தருவதற்கு நானே துணை' என்கிறார்.
எனவே பிறரை நேசிக்க ஆரம்பியுங்கள். அப்போதுதான் இறைவனின் நேசம் உங்களுக்கு கிடைக்கும். துரோகம் இழைத்தவருக்கும் நன்மை செய்யுங்கள்.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:52 மணி