ADDED : மார் 19, 2025 06:10 PM

கடைசி இரவுகள்
ரம்ஜான் மாதத்தின் கடைசி பத்து இரவுகள் முக்கியமானவை.
'லைலத்துல் கத்ர்' எனப்படும் இரவும், இந்த பத்து நாளிலேயே உள்ளது. நபிகள் நாயகத்தின் கூற்றுப்படி, 'எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே நீங்கள் கடைசி பத்து இரவுகளில் ஒற்றைப்படையான இரவுகளில் அதைத் தேடுங்கள்' என்றார். இதையே அவரும் செய்து காட்டினார்.
'ரம்ஜானின் கடைசி பத்து நாட்கள் வந்து விட்டால் வேட்டியை இறுகக் கட்டிக் கொள்வார் நபிகள் நாயகம். தொழுகை செய்து இரவை உயிர்ப்பிப்பார். இறைவனை வணங்குவதற்காக குடும்பத்தினரையும் எழுப்பி விடுவார்' என்கிறார் ஆயிஷா. ஆகவே ரம்ஜான் மாதத்தில் அதிகளவு தொழுகை நடத்த வேண்டும். அதிலும் கடைசி பத்து இரவுகளில் தொழுகையை தீவிரப்படுத்த வேண்டும்.
இந்த இரவில் தான் குர்ஆன் அருளப்பட்டது. எனவே தொழுகைகளை அதிகப்படுத்தி பாவங்களைப் போக்கிக் கொள்ளுங்கள். இறைவனின் கருணையை பெறுங்கள்.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:52 மணி