ADDED : மார் 14, 2024 03:05 AM

கோபக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றி நபிகள் நாயகம் கூறுவதைக் கேளுங்கள்.
''கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்குபவனே வலிமை வாய்ந்தவன். கோபம் கொள்பவனை இறைவன் விரும்ப மாட்டான். அவன் ஈடுபடும் செயல்களில் தடைகளைச் சந்திப்பான். அவனது இதயம் வறண்டு விடும். கோபப்படும் ஒருவன் தனக்குத் தானே அநியாயம் செய்து கொள்கிறான். கோபம் ஷைத்தானின் வெளிப்பாடாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கிறான். நீரால் மட்டுமே நெருப்பை அணைக்க முடியும். எனவே கோபம் வந்தால் 'ஒளு' (தண்ணீரால் சுத்தம் செய்தல்) செய்ய வேண்டும்.
அடிக்கடி கோபப்படும் ஒரு நபர், ''எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள்'' என கேட்ட போது “கோபம் கொள்ளாதீர்” என பதிலளித்தார். அந்த மனிதர் மீண்டும் மீண்டும் ''எனக்கு அறிவுரை கூறுங்கள்'' என கேட்டுக் கொண்டே இருந்தார். பொறுமையாக ஒவ்வொரு முறையும் ''கோபம் கொள்ளாதீர்'' என பதிலளித்தார். பிறருக்கு அறிவுரை சொல்வதாக இருந்தால் இதுவே உங்களின் முதல் வார்த்தையாகட்டும்.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:55 மணி

