ADDED : மார் 19, 2024 09:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மம் செய்யும் பலர் மற்றவர்களிடம் தன்னைப் பற்றிச் பெருமையாகச் சொல்லி, 'தான் பெரியவன்' என்னும் பட்டம் பெற விரும்புகின்றனர். சிலரோ மற்றவர்கள் மத்தியில் கவுரவமாக வாழ வேண்டும் என்பதற்காக தர்மம் செய்வார்கள். இவர்களைப் பற்றி நபிகள் நாயகம் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.
'வெளிப்பகட்டுக்காகவே தொழுதவன் (ஷிர்க் செய்தவன்), நோன்பு நோற்றவன், தர்மம் செய்தவன் ஆகியோர் இறைவனுக்கு இணை வைத்தவன் ஆவார்கள்' அதாவது இறைவனின் திருப்தியை பெறும் நோக்கத்துடன் நற்செயல்களில் ஈடுபட வேண்டும். மற்றவர் முன்னிலையில் நல்லவராக நடித்து, அவர்களின் பாராட்டை எதிர்பார்த்து நற்செயல் செய்தால் பலன் கிடைக்காது.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:52 மணி

