ADDED : ஜன 30, 2025 12:19 AM
சென்னை:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
நாட்டின் 18 பெரிய மாநிலங்களின் நிதிநிலை குறித்து, 'நிடி ஆயோக்' வெளியிட்டுள்ள 2023ம் ஆண்டிற்கான ஆவணத்தின்படி, தமிழகம் 11ம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.
ஒடிசா, 67.8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், தமிழகம் அதில் பாதிக்கும் குறைவாக, 29.2 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.
தமிழகத்தின் வருவாய் செலவினங்களில், 52 சதவீதம் சம்பளம், ஓய்வூதியம், கடன் வட்டி போன்றவைகளுக்கு சென்று விடுவதாகவும், மீதமுள்ள 48 சதவீத நிதியில் பெரும்பகுதி மானியங்களுக்கே சென்று விடுவதாகவும் நிடி ஆயோக் தெரிவித்து உள்ளது.
மது வருவாயையும், பத்திரப்பதிவு கட்டணத்தையும் நம்பி நடத்தப்படும் தி.மு.க., ஆட்சியில், நிதிநிலை மேம்பட வாய்ப்பில்லை. எனவே, மக்களை பாதிக்காத வகையில் தமிழகத்தில் நிதிநிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

