உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 17, 2026 06:59 AM

அ நிறம் | அளவு
சென்னை: பிரசாரத்தில் அன்புமணி தரப்பு வேட்பாளர்கள், தன் புகைப் படங்களை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை 13வது உரிமையியல் நீதிமன்றத்தில், ராமதாஸ் தாக்கல் செய்த மனுவில், 'பா.ம.க., தலைவராக சட்ட விரோதமாக அன்புமணி நீடிக்கிறார். தேர்தல் பிரசாரத்தில் என் புகைப்படத்தை, அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் ௧௮ பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்து உள்ளது.
