sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திராவிட கட்சிகளுடன் கூட்டணி : மன்னிப்பு கேட்கிறார் ராமதாஸ்

/

திராவிட கட்சிகளுடன் கூட்டணி : மன்னிப்பு கேட்கிறார் ராமதாஸ்

திராவிட கட்சிகளுடன் கூட்டணி : மன்னிப்பு கேட்கிறார் ராமதாஸ்

திராவிட கட்சிகளுடன் கூட்டணி : மன்னிப்பு கேட்கிறார் ராமதாஸ்


ADDED : ஆக 06, 2011 11:11 PM

Google News

ADDED : ஆக 06, 2011 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: ''தமிழகத்தில் இதுவரை திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்ததற்கு, மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். திருவண்ணாமலையில் பா.ம.க., மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: இனி வரும் காலங்களில், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது கிடையாது என்ற நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது, இதில், பா.ம.க., கடைசி வரை உறுதியாக இருக்கும். ஓட்டுக்காக இலவசங்களை கொடுத்து மக்களை உழைக்கச் செய்யாமல் சோம்பேறித்தனமாக்குவது போன்ற செயல்களில் ஆளும் கட்சி, ஆண்ட கட்சிகள் செய்து வருகின்றன. இதற்கெல்லாம் ஆண்ட கட்சி, ஆளும் கட்சி, மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வளவு மோசமான கட்சிகளிடம் பா.ம.க., இதுவரை கூட்டணி வைத்ததற்காக, பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் பா.ம.க., போட்டியிடும். அப்போது, பா.ம.க.,வினரிடையே கோஷ்டி மோதல் இருக்காமல் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

பின்னர் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று பா.ம.க., வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறது. பா.ம.க., இனி வரும் காலங்களில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்காது. பா.ம.க.,வுடன் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன், பா.ம.க.,வின் தலைமையின் கீழ் இணைந்து செயல்படும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும். தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. வரும் உள்ளாட்சி தேர்தலில், பா.ம.க., தனித்து போட்டியிடும். இலங்கை தமிழர் பிரச்னையில் தனி ஈழமே தீர்வாக அமையும். உள்ளாட்சி தேர்தலுக்கு பின், மதுவை ஒழிக்க போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.






      Dinamalar
      Follow us