தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ராமலிங்கம் கொலை வழக்கு; பி.எப்.ஐ., நிர்வாகிகளுக்கு வலை

ராமலிங்கம் கொலை வழக்கு; பி.எப்.ஐ., நிர்வாகிகளுக்கு வலை

ராமலிங்கம் கொலை வழக்கு; பி.எப்.ஐ., நிர்வாகிகளுக்கு வலை


ADDED : ஜன 28, 2025 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2025 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : தடை செய்யப்பட்ட, பி.எப்.ஐ., என்ற பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகிகளை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம், 2019 பிப்., 5ல் கொல்லப்பட்டார். என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஹிந்துக்கள் மத மாற்றம் செய்யப்படுவதை தடுத்ததால், ராமலிங்கம் கொல்லப்பட்டது தெரியவந்தது.

இந்த வழக்கில், பி.எப்.ஐ., நிர்வாகிகளான, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் முகமது அலி ஜின்னா, 37, கும்பகோணம் அப்துல் மஜீத், 37; பாபநாசம் வடக்கு மாங்குடி புர்ஹானுதீன், 31; திருமங்கலகுடி சாகுல் ஹமீது, 30; நபீல் ஹாசன், 31 ஆகியோர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்கள் பற்றி துப்பு கொடுத்தால், தலா 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இவர்களில், 2024 நவ., 15ல், முகமது அலி ஜின்னா கைது செய்யப்பட்டார். இரு தினங்களுக்கு முன், அப்துல் மஜீத், சாகுல் ஹமீது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:தற்போது கைதாகி உள்ள அப்துல் மஜீத், சாகுல் ஹமீது ஆகியோர், ராமலிங்கம் கொலைக்கு முன், அவரது இரண்டு கைகளையும் துண்டாக்கி விடுவது என திட்டம் தீட்டி உள்ளனர். அதன்படி, அவரை வெட்டவும் முயன்றுள்ளனர். அது, தோல்வியில் முடிந்து விட்டது. அதன் பின்னரே, தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, அவரை கொலை செய்துள்ளனர்.

ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும், மற்ற பி.எப்.ஐ., நிர்வாகிகள், கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் பகுதியில் பதுங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us