தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ராமேஸ்வரம் – மைசூர் சிறப்பு ரயில்

ராமேஸ்வரம் – மைசூர் சிறப்பு ரயில்

ராமேஸ்வரம் – மைசூர் சிறப்பு ரயில்


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 07:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 07:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ராமேஸ்வரத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

மைசூரில் இருந்து வரும் 5 முதல் நவ., 30ம் தேதி வரை வாரம்தோறும் திங்கள் கிழமைகளில் மாலை 6:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:00 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும். ராமேஸ்வரத்தில் இருந்து வரும் 6 முதல் டிச., 1ம் தேதி வரை வாரம்தோறும் செவ்வாய் கிழமைகளில் மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7:45 மணிக்கு மைசூர் செல்லும்.

இந்த சிறப்பு ரயில், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி வழியாக இயக்கப்பட உள்ளது. இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு தொடங்கும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us