ADDED : நவ 27, 2025 09:13 AM

மதுரை: ராமேஸ்வரம் - - திருப்பதி இடையே மதுரை வழியாக சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
டிச., 2, 9ல் மாலை 4:30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06080), மறுநாள் காலை 10:10 மணிக்கு திருப்பதி செல்லும். மறுமார்க்கத்தில் டிச., 3, 10ல் காலை 11:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06079), மறுநாள் அதிகாலை 4:45 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும்.
மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி ரோடு, வேலூர், காட்பாடி வழியாக செல்லும். 3 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 'ஸ்லீப்பர்' பெட்டிகள், 4 பொது பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகளுடன் இயக்கப்படும்.
இதற்கான முன்பதிவு இன்று (நவ., 27) காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.

