UPDATED : செப் 01, 2011 01:15 AM
ADDED : செப் 01, 2011 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகப்பட்டினம் :நாகை அடுத்த நாகூர் தர்காவில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடந்த சிறப்பு தொழுகையில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சகோதரத்துவத்தையும், ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக, முஸ்லிம்களால் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை, நாகை மாவட்டம் முழுவதும், நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நாகூர் ஆண்டவர் தர்காவில், மேனேஜிங் டிரஸ்டி ஷேக் ஹசன் சாகிப், 'துவா' ஓதிய பின் நடந்த சிறப்பு தொழுகையில், ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகூர் சில்லடி தர்கா பகுதியில் சில்லடி சாகிப் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. அனைத்து இடங்களிலும் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்திய பின், ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.