sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ரேஷன் கார்டுதாரர்கள் அலைக்கழிப்பு

ரேஷன் கார்டுதாரர்கள் அலைக்கழிப்பு

ரேஷன் கார்டுதாரர்கள் அலைக்கழிப்பு


ADDED : பிப் 01, 2024 12:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2024 12:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:பொங்கல் பரிசு பயனாளிகள் பட்டியலில் விடுபட்டவர்கள், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க செல்லும் போது, பொருட்களை வழங்காமல் ஊழியர்கள் திருப்பி அனுப்புவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், 'ரேஷன் கடைக்கு சென்று, கருவியில் விரல் ரேகையை பதிவு செய்தும் பொருட்கள் தரவில்லை; ஊழியரிடம் கேட்டால், ஒப்புதல் வரவில்லை என்று பதில் சொல்கின்றனர்' என்றனர்.

ரேஷன் ஊழியர்கள் கூறுகையில், 'சிலரின் விரல் ரேகையை கருவியில் பதிவு செய்யும் போது, 'எச்சரிக்கை, எச்சரிக்கை' என்று வருகிறது. பொருட்கள் வழங்க ஒப்புதல் வருவதில்லை. அந்த நபரின் பெயர், பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் வழங்கிய போது விடுபட்ட பெயர்களில் இருந்தது' என்கின்றனர்.

கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கார்டுக்கு உரியவர்கள் வருவதை உறுதி செய்யவே, கருவியில் விரல் ரேகை பதிவு செய்து, பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இதனால், முறைகேடு செய்ய முடியாது. ஒவ்வொரு கார்டுதாரருக்கும் உரிய பொருட்கள் சரியாக வழங்கப்படுகின்றன.

எனவே, வேண்டுமென்றே மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் ஊழியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொருட்கள் தர மறுத்தால், அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us