தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ வீடுகளுக்கு ரேஷன் பொருள் 18 மாவட்டங்களில் 65 சதவீதம் தாண்டவில்லை

 வீடுகளுக்கு ரேஷன் பொருள் 18 மாவட்டங்களில் 65 சதவீதம் தாண்டவில்லை

 வீடுகளுக்கு ரேஷன் பொருள் 18 மாவட்டங்களில் 65 சதவீதம் தாண்டவில்லை


ADDED : மார் 08, 2026 02:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 02:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ரேஷன் கடைகளுக்கு செல்ல முதியோர் சிரமப்படுகின்றனர். எனவே, 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளி என, 22 லட்சம் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு, நேரடியாக பொருட்கள் வினியோகிக்கும் தாயுமானவர் திட்டத்தை, 2025 ஆகஸ்டில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுதும், 27.41 லட்சம் வீடுகளுக்கு, ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மாநிலம் முழுதும் சராசரியாக, 75 - 80 சதவீதம் பேருக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

அதேசமயம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, சேலம், நாகை, துாத்துக்குடி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, கடலுார், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தென்காசி, நாமக்கல், திருப்பூர், சிவகங்கை, மயிலாடுதுறை மாவட்டங்களில், 65 சதவீதத்திற்கும் குறைவான வீடுகளுக்கே, ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

எனவே, 100 சதவீதம் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட மாவட்ட இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us