ADDED : ஆக 03, 2025 01:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக அரசு, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு, ரேஷன் பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுதும், 16 லட்சம் கார்டுதாரர்கள் பயன் பெற உள்ளனர். வரும், 7ம் தேதி திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.
இதற்காக, ஏற்கனவே சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்ட, 10 மாவட்டங்கள் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தலா, 10 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட கார்டுதாரர்களின் வீடுகளில் நேற்று ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டது.
இந்த பணி, வெற்றிகரமாக அமைந்ததாக, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

