ரேஷன் கடை பணியாளர்களுக்கு கார்டுக்கு தலா ரூ.3 ஊக்கத்தொகை
ரேஷன் கடை பணியாளர்களுக்கு கார்டுக்கு தலா ரூ.3 ஊக்கத்தொகை
ADDED : மார் 14, 2026 03:15 AM
சென்னை: 'பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதற்கு, ரேஷன் கடை பணியாளர்களுக்கு, ஒரு கார்டுக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகை வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்' என, கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
இந்தாண்டு பொங்கலுக்கு, 2.22 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, 3,000 ரூபாய் ரொக்கம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
கடந்த காலங்களில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதற்காக, ரேஷன் கடை பணியாளர்களுக்கு, கூடுதல் பணிச்சுமையை ஈடுசெய்யும் வகையில், கார்டுக்கு 50 காசு வழங்கப்பட்டு வந்தது.
ரேஷன் கடை பணியாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து, இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பை, சிறந்த முறையில் வழங்கியதற்காக, பணியாளர்களுக்கு ஒரு கார்டுக்கு, மூன்று ரூபாய் ஊக்கத்தொகை வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்காக கூடுதல் செலவினம், 6.47 கோடி ரூபாய் வழங்க நிர்வாகம் அனுமதி அளித்துள்ளார்.
இதன் வாயிலாக, ரேஷன் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை, முதல்வர் நிறைவேற்றியுள்ளார். அவருக்கு, கூட்டுறவு துறை சார்பிலும், பணியாளர்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
