sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கீழடி ஆய்வறிக்கையை உடனே வெளியிட தொல்லியல் துறைக்கு ரவிக்குமார் கடிதம்

/

கீழடி ஆய்வறிக்கையை உடனே வெளியிட தொல்லியல் துறைக்கு ரவிக்குமார் கடிதம்

கீழடி ஆய்வறிக்கையை உடனே வெளியிட தொல்லியல் துறைக்கு ரவிக்குமார் கடிதம்

கீழடி ஆய்வறிக்கையை உடனே வெளியிட தொல்லியல் துறைக்கு ரவிக்குமார் கடிதம்


ADDED : மே 25, 2025 01:14 AM

Google News

ADDED : மே 25, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'கீழடி ஆய்வறிக்கையை, இந்திய தொல்லியல் துறை உடனே வெளியிட வேண்டும்' என, இந்திய தொல்லியல் துறை இயக்குநர் ஜெனரல் யதுபீர் சிங் ராவத்திற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் கூறியுள்ளதாவது:

கடந்த, 2013 முதல் 2016 வரை, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில், தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில், அகழ்வாராய்ச்சி நடந்தது. இதில், 5,000க்கும் மேற்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், திடீரென அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட, ஸ்ரீராமனின் கீழ் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளை அளிக்கவில்லை.

கீழடியின் கலாசாரம், விவசாயம், கால்நடைகள், நகர்ப்புற வளர்ச்சியின் முக்கிய அம்சங்களை கோடிட்டுக் காட்டும் இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சி குறித்த விரிவான அறிக்கைகளை, அமர்நாத் ராமகிருஷ்ணன் மத்திய அரசுக்கு சமர்ப்பித்திருந்தார்.

கீழடியில் கண்டறியப்பட்ட கலைப்பொருட்கள், 2,600 ஆண்டுகள் பழமையானவை என்பது, 'ரேடியோகார்பன் டேட்டிங்' வாயிலாக கண்டறியப்பட்டது. ஆனாலும், இந்திய தொல்லியல் துறை கீழடியில் அகழ்வாராய்ச்சியை நிறுத்தியது.

அதன்பின், கீழடியில் பல கட்ட அகழ்வாராய்ச்சிகளை, தமிழக தொல்லியல் துறை நடத்தி, அதன் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்பின்னும், இந்திய தொல்லியல் துறை, அமர்நாத் ராமகிருஷ்ணன் அளித்த, 982 பக்க அறிக்கையை வெளியிடவில்லை. அதில் வரலாற்று ரீதியான நுட்பமான தகவல்கள் உள்ளன.

இந்த அறிக்கையை வெளியிடக் கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, 2024 நவம்பருக்குள் அறிக்கையை வெளியிடுமாறு, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த காலக்கெடு முடிந்தும் அறிக்கை வெளியிடப்படாதது, நீதிமன்ற அவமதிப்பாகும்.

இதை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். லோக்சபாவிலும் இப்பிரச்னையை எழுப்பினேன். இந்நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கையை, மீண்டும் சமர்ப்பிக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளதாக அறிந்தேன். இதன் வாயிலாக, நீதித் துறை, பார்லிமென்டை வெளிப்படையாக மீறுவதாக தெரிகிறது.

இந்திய தொல்லியல் துறை, உலக அளவில் நற்பெயரை கொண்ட மதிப்புமிக்க நிறுவனம். அரசியல் காரணங்களுக்காக, அதன் மீது செல்வாக்கு செலுத்த அனுமதிப்பது, அதன் நம்பகத்தன்மை, மதிப்பை சேதப்படுத்தும்.

எனவே, கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை, மேலும் தாமதிக்காமல் வெளியிட்டு, நிறுவனத்தின் கண்ணியத்தையும் நேர்மையையும் நிலைநிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us