sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 மேகதாது அணை குறித்து மறு ஆய்வு மனு: அமைச்சர் துரைமுருகன்

/

 மேகதாது அணை குறித்து மறு ஆய்வு மனு: அமைச்சர் துரைமுருகன்

 மேகதாது அணை குறித்து மறு ஆய்வு மனு: அமைச்சர் துரைமுருகன்

 மேகதாது அணை குறித்து மறு ஆய்வு மனு: அமைச்சர் துரைமுருகன்


ADDED : டிச 13, 2025 06:44 AM

Google News

ADDED : டிச 13, 2025 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'மேகதாது அணை தொ டர்பாக, மறு ஆய்வு மனுவை, தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது' என, நீர்வளத்துறை அமைச்சர் து ரைமு ருகன் தெரிவித்தா ர்.

அவரது அறிக்கை:

கா விரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்ட, கர்நாடக அரசு முயற்சித்ததை எதிர்த்து, தமிழக அரசு 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் , அதனுடன் தொடர்புடைய, பிற வழக்கு களும், கடந்த நவ.,13ம் தேதி வி சாரணைக்கு வந்தன.

இதில், மேகதாது அணை, தமிழகத்திற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும்; இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னையை, மேலும் பெரிதாக்கும் என்பதையும் குறிப்பிட்டு, தமிழகம் வாதிட்டது.

இவ்வழக்கில், 'மேகதாது அணை தொடக்க நிலையில் தான் உள்ளது. இத்திட்டம் உச்ச நீதிமன்ற முந்தைய தீர்ப்பிற்கு உட்பட்டதா, இல்லையா என்பதை, நிபுணர்கள் அடங்கிய மத்திய நீர்வளக்குழுமம் தான் தீர்மானிக்க முடியும்' என, நீதிமன்றம் கூறியுள்ளது.

இது குறித்த வாதங்களை, தமிழக அரசு, மத்திய நீர்வளக் குழுமத்திடம் முன் வைத்துள்ளது. இந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் முரணாக உள்ளன. எனவே, இவ் வழக்கில் கடந்த 11ம்தேதி உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை, தமிழக அ ரசு தாக் கல் செய்துள்ளது .

மத்திய நீர்வளக் குழுமத்திடமும், மேகதாது அணை, எவ்வாறு தமிழகத்திற்கு பாதகமாக இருக்கும் என்பதையும், உச்ச நீதிமன்ற ஆணைக்கு முரணாக இருக்கும் என்பதையும் குறிப்பிட்டு, ஒரு விரிவான மனுவும், கடந்த 9ம் தேதி அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசு, காவிரி டெல்டா விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க, தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கர்நாடக அரசின் முயற்சியை, தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us