தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தி.மு.க., - அ.தி.மு.க., இணைந்து வந்தாலும் ஏற்க தயார்: கவர்னர்

 தி.மு.க., - அ.தி.மு.க., இணைந்து வந்தாலும் ஏற்க தயார்: கவர்னர்

 தி.மு.க., - அ.தி.மு.க., இணைந்து வந்தாலும் ஏற்க தயார்: கவர்னர்


ADDED : மே 08, 2026 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2026 01:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் அளித்த பேட்டி:

ஆட்சி அமைக்க உரிமை கோரும் கட்சி, அதற்கான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான 118 எம்.எல்.ஏ.,க்களை, நேரில் அழைத்து வர வேண்டிய அவசியம் இல்லை.

அதை சட்டசபையில் தான் நிரூபிக்க வேண்டும். என்னிடம், பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எண்ணிக்கையை காண்பித்தால் போதும். பெரும்பான்மை இல்லாமல், எப்படி ஆட்சி பொறுப்பேற்க அனுமதிக்க முடியும்?

விஜயை முதல்வராக்கி, பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்றால், குதிரை பேரம் நடக்க வழி வகுக்கும். அ.தி.மு.க., - தி.மு.க., இணைந்து பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட பட்டியலை வழங்கினால், அதை ஏற்க தயார். சரியோ, தவறோ, எனக்கு தேவை எண்ணிக்கை; பெரும்பான்மையை காண்பித்தால் போதும்.

அடுத்த சில நாட்கள், யாரும் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை எனில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us