sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரஷ்யாவுக்கு ஆட்கள் தேர்வு ஏஜன்ட் ஆபீசில் சி.பி.ஐ., ரெய்டு

/

ரஷ்யாவுக்கு ஆட்கள் தேர்வு ஏஜன்ட் ஆபீசில் சி.பி.ஐ., ரெய்டு

ரஷ்யாவுக்கு ஆட்கள் தேர்வு ஏஜன்ட் ஆபீசில் சி.பி.ஐ., ரெய்டு

ரஷ்யாவுக்கு ஆட்கள் தேர்வு ஏஜன்ட் ஆபீசில் சி.பி.ஐ., ரெய்டு


ADDED : மார் 08, 2024 12:10 PM

Google News

ADDED : மார் 08, 2024 12:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகம் உட்பட பல மாநிலங்களில் உள்ள 'டிராவல் ஏஜன்சிகள்' ரஷ்யாவில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்கின்றன. இதற்கு ஆட்களை அழைத்து வரும் முகவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் கமிஷன் வழங்குகின்றனர்.

பின்னர் இந்தியாவில் இருந்து, அழைத்துச் செல்லப்படும் அவர்களுக்கு ரஷ்யாவில் ராணுவ பயிற்சி அளித்து உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்துகின்றனர். இதில் பங்கேற்ற சிலர் காயமடைந்து தவித்து வருகின்றனர்.

ரஷ்யாவுக்கு வேலைக்கு அழைத்து செல்லும் நிறுவனங்கள்மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று சென்னை, மதுரை, கேரளாவில் திருவனந்தபுரம், மஹாராஷ்டிராவில் மும்பை உள்பட 10 இடங்களில் உள்ள, தனியார் டிராவல் ஏஜன்ட், முகவர்கள் வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், 50 லட்சம் ரூபாய், மடிக்கணினி, மொபைல் போன்கள், ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us