தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இன்று 2 மாவட்டங்களுக்கு சிவப்பு, 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

இன்று 2 மாவட்டங்களுக்கு சிவப்பு, 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

இன்று 2 மாவட்டங்களுக்கு சிவப்பு, 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!


UPDATED : மே 26, 2025 04:37 PM

ADDED : மே 26, 2025 02:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 26, 2025 04:37 PM ADDED : மே 26, 2025 02:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 26) 2 மாவட்டங்களுக்கு சிவப்பு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று, தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளது. மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை (மே 27ம்) உருவாகக்கூடும்.

கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு அலர்ட் (அதிக கனமழை) விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் (மிக கனமழை) விடுக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் (கனமழை) விடுக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்), திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் (மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை



தமிழக கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் மே 30ம் தேதி சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us