ADDED : நவ 29, 2024 06:44 AM

சென்னை: தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று(நவ.,29) இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். டிச., 4 வரை மிதமான மழை தொடர வாய்ப்பு உள்ளது.
இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று, 21 செ.மீ.,க்கு மேல் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது
ஆரஞ்ச் அலெர்ட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலுார், தஞ்சாவூர் மாவட்டங்களில் இன்று, 12 செ.மீ.,க்கு மேல் மிக கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதால், 'ஆரஞ்ச் அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில், 11 செ.மீ., வரை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிகன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும்; இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கன மழையும், நாளை அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.