" கோடை குளிரானது " - 7 மாவட்டங்களுக்கு அதிகன மழை; 15 மாவட்டங்களில் கனமழை
" கோடை குளிரானது " - 7 மாவட்டங்களுக்கு அதிகன மழை; 15 மாவட்டங்களில் கனமழை
UPDATED : மே 16, 2024 02:02 PM
ADDED : மே 16, 2024 01:12 PM

சென்னை: கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று ( மே 16) இன்று அதிகனமழையும், 15 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து கோடை வெப்பம் வறுத்தெடுத்த நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெய்ய துவங்கிய கோடை மழை மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்தது. மேலும் இந்த மழை வரும் 20ம் தேதி வரை பல மாவட்டங்களில் தொடரக்கூடும் என்றும் வானிலை மையம்
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று( மே 16) கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யலாம்.
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், நாகபட்டினம், கடலூர், மயிலாடுதுறை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல் திருச்சி ஆகிய 15 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னைக்கு எப்படி ?
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் 16 செ.மீ., சிங்கம்புணரியில் 14 செ.மீ., மன்னார்குடியில் 13 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.