ADDED : அக் 04, 2024 09:53 PM
சென்னை:சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி விரைவு ரயிலில், அதிகளவில் 'ஏசி' பெட்டிகளே இருப்பதாக பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணியர் சங்க செயலர் எட்வர்ட் ஜெனி கூறியதாவது:
ரயில் பயணியரில் 70 சதவீதம் பேர் சிலீப்பர் முன்பதிவு பெட்டிகளை தான் விரும்புகின்றனர். இந்த ரயிலில் முன்னர், 13 பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டது. தற்போது, ஏழு பெட்டிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
'ஏசி' பெட்டிகளுக்கு தேவை ஏற்பட்டால், கூடுதல் பெட்டிகளாக இணைக்க வேண்டுமே தவிர, இருக்கும் பெட்டிகளை குறைக்கக்கூடாது.
அனைத்து விரைவு ரயில்களிலும், 'ஏசி' இல்லாத 10 சிலீப்பர் பெட்டிகள் கட்டாயம் இருக்க ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பயணியரின் தேவை அடிப்படையில் தான், 'ஏசி' பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகின்றன. 'ஏசி' பெட்டிக்கான தேவை குறையும் போது, 'ஏசி' இல்லாத பெட்டிகள் மீண்டும் இணைத்து இயக்கப்படும்' என்றனர்.