பெரியாறு அணையில் நீர்திறப்பு குறைப்பு: மின் உற்பத்தி நிறுத்தம்
பெரியாறு அணையில் நீர்திறப்பு குறைப்பு: மின் உற்பத்தி நிறுத்தம்
ADDED : ஜன 08, 2024 05:30 AM

கூடலுார் : முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 105 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்ப் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 137 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி).
பெரியாறில் 1.4 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 820 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 6370 மில்லியன் கன அடியாகும்.
2023 டிச., 23ல் நீர்ப்பிடிப்பில் பெய்த மழையால் நீர்மட்டம் 141 அடியை எட்டியது. அதன் பின் மழை குறைந்ததால் நீர்மட்டமும் குறைந்து வந்தது.
இந்நிலையில் தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த 511 கன அடி நீர், நேற்று காலை 10:30 மணியிலிருந்து 105 கன அடியாக குறைக்கப்பட்டது.
லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் இயக்குவதற்கு குறைந்தது 250 கன அடி நீர் தேவை.
தற்போது அணையில் இருந்து நீர் திறப்பு 105 கன அடியாக குறைக்கப்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
மின் உற்பத்தி இல்லாததால் தற்போது திறக்கப்பட்ட தண்ணீர் குமுளி மலைப் பாதையில் உள்ள இரைச்சல் பாலம் வழியாக வெளியேறுகிறது.