தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ரூ.7,000 லஞ்சம் பெற்ற பதிவு எழுத்தர் சிக்கினார்

ரூ.7,000 லஞ்சம் பெற்ற பதிவு எழுத்தர் சிக்கினார்

ரூ.7,000 லஞ்சம் பெற்ற பதிவு எழுத்தர் சிக்கினார்


ADDED : ஜன 23, 2026 10:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 10:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை : வாரிசு சான்றிதழுக்காக, 7,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, கோவை வடக்கு தாலுகா அலுவலக பதிவு எழுத்தர் கைது செய்யப்பட்டார்.

கோவை, வெள்ளகிணறு அருகேயுள்ள உருமாண்டபாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது வாரிசு சான்றிதழ் தொலைந்து விட்டது. இதனால், அவரிடமிருந்து ஜெராக்ஸ் மற்றும் ஆவணங்களை இணைத்து புதிய வாரிசு சான்றிதழ் வழங்க கோரி, கோவை, பாலசுந்தரம் ரோட்டிலுள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு புதிய வாரிசு சான்றிதழ் வழங்க வட்டாட்சியர் கையெழுத்திட்டார். சான்றிதழ் பெறுவதற்காக, ஆவண காப்பக, பதிவு எழுத்தர் ஹரிஹரன், 32, என்பவரை சந்தித்தார்.அப்போது, 7,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால், சான்றிதழ் தருவதாக ஹரிஹரன் கூறினார். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று விஜயகுமார் கூறிய போதும், ஹரிஹரன் சான்றிதழ் கொடுக்க மறுத்தார்.

கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைபடி, லஞ்ச பணத்தை, விஜயகுமார் கொடுத்து விட்டு வந்தவுடன், லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்.பி., ராஜேஷ், இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார், 7,000 ரூபாய் லஞ்ச பணத்தை பறிமுதல் செய்து, ஹரிஹரனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us