உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : பிப் 01, 2026 01:59 AM

அ நிறம் | அளவு
சென்னை: காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக பதிவுத் துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர், சென்னை சேப்பாக்கத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் மகேஷ் கூறியதாவது:
தற்போது, பணியாளர்கள் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட, 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள், பல ஆண்டுகளாக விசாரணை கூட துவக்கப்படாமல், பணி நீக்கத்தில் உள்ளனர்.
அவர்களது குடும்ப வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பணியிடை நீக்கங்களை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
