ADDED : டிச 03, 2024 12:24 AM

சென்னை, எழும்பூர் போலீஸ் நிலையத்தில், நடிகை கஸ்துாரி தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை, நீதிமன்றம் தளர்த்தி உத்தரவிட்டு உள்ளது.
சென்னையில் கடந்த மாதம் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தெலுங்கு மொழி பேசும் பெண்களை நடிகை கஸ்துாரி அவதுாறாக பேசியதாக கைது செய்யப்பட்டார்.
பின், எழும்பூர் போலீஸ் நிலையத்தில் தினமும் காலை, 10:00 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற, நிபந்தனை அடிப்படையில், அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
அதன்படி, நடிகை கஸ்துாரி தினமும் கையெழுத்திட்டு வந்த நிலையில், மகனின் கல்வி, படப்பிடிப்பு காரணங்களுக்காக நிபந்தனையில் இருந்து தளர்வு கோரி, எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை நேற்று விசாரித்த, எழும்பூர் 14வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் தயாளன், தினமும் ஆஜராவதில் இருந்து கஸ்துாரிக்கு விலக்கு அளித்தார்; வாரந்தோறும் திங்கள் கிழமை காலை, 10:00 மணிக்கு எழும்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டார்.