ரிலையன்ஸ் ரீடெய்ல் - 'ஸ்மார்ட் பஜார்' சலுகை விலையில் பொருட்கள் விற்பனை
ரிலையன்ஸ் ரீடெய்ல் - 'ஸ்மார்ட் பஜார்' சலுகை விலையில் பொருட்கள் விற்பனை
ADDED : மே 01, 2025 12:52 AM

சென்னை:'ஸ்மார்ட் பஜார்' அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை, சலுகை விலையில் விற்பனை செய்யும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
இது குறித்து, ரிலையன்ஸ் ரீடெய்ல் வேல்யூ பார்மேட்டின் தலைமை நிர்வாக அதிகாரி தாமோதர் மால் கூறியதாவது:
ரிலையன்ஸ் ரீடெய்ல், நாடு முழுதும், 'ஸ்மார்ட் பஜார்' என்ற பெயரில், 930க்கும் மேற்பட்ட கடைகளை நடத்தி வருகிறது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், 'ஸ்மார்ட் பஜார்' சலுகை விலையில், பொருட்கள் விற்பனை செய்யும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. வரும் 4ம் தேதி வரை சலுகை விலை விற்பனை இருக்கும்.
ஐந்து கிலோ அரிசி மற்றும் 3 லிட்டர் எண்ணெய் 799 ரூபாய்; 500 கிராம் பாதாம் 419 ரூபாய், முந்திரி 500 கிராம் 439 ரூபாய் என விற்பனை செய்யப்படும்.
அதுபோல, சோப்பு, பெட்ஷீட் உள்ளிட்டவை சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
அதிக மதிப்புள்ள பொருட்களை குறைந்த விலையில் வாங்குவதால், வாடிக்கையாளர்கள் அதிகம் சேமிக்க முடியும். வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை, மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

