ADDED : ஜன 27, 2025 03:46 AM
சென்னை: குவைத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு, தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் மங்கலம்பேட்டையை சேர்ந்தவர்கள், முகமது யாசின் மற்றும் முகமது ஜுனைத். இருவரும், குவைத் நாட்டில் டிரைவர்களாக, பணியாற்றி வந்தனர். கடந்த 19ம் தேதி காலை, கடும் குளிரில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக, தாங்கள் தங்கியிருந்த அறையில் தீ மூட்டியுள்ளனர்.
அதை அணைக்காமல் அப்படியே உறங்கியதால், நெருப்பு அணைந்து புகை எழுந்துள்ளது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, இருவரும் இறந்துள்ளனர். இருவரின் உடல்கள், கடந்த 22ம் தேதி குவைத் நாட்டிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும், தமிழக அரசு சார்பில், தலா ௫ லட்சம் ரூபாய், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார்.

