தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளுக்கு விடுவிப்பு

 மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளுக்கு விடுவிப்பு

 மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளுக்கு விடுவிப்பு


ADDED : மே 16, 2026 03:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 03:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகளில், 1,000 ரூபாய் நேற்று வரவு வைக்கப்பட்டது.

தி.மு.க., ஆட்சியில் மாதந்தோறும் பெண்களுக்கு 1,000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் வாயிலாக, கடந்த பிப்ரவரி மாதம் வரை 1.31 கோடி பேர் பயனடைந்து வந்தனர்.

சட்டசபை தேர்தல் காரணமாக, ஏப்ரல் மாதம் வரையிலான உரிமைத் தொகையுடன், கோடை கால சிறப்பு நிதி சேர்த்து 5,000 ரூபாய் வழங்கப்பட்டது.

இந்நிலையில், சட்டசபை தேர்தலில் த.வெ.க., ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அக்கட்சி ஆட்சிக்கு வந்தால், மகளிர் உதவித் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக அறிவித்திருந்தது.

இது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்க, கால அவகாசம் தேவைப்படுவதால், இம்மாதம் வழக்கம்போல் 1,000 ரூபாயை வழங்க அரசு முடிவு செய்தது.

அதை தொடர்ந்து, விரைவில் மகளிர் உரிமைத் தொகை விடுவிக்கப்படும் என, நேற்று முன்தினம் விஜய் அறிவித்தார். இந்நிலையில், நேற்று பயனாளிகளின் வங்கி கணக்கில், மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us