கர்ப்பிணிக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
கர்ப்பிணிக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
UPDATED : பிப் 09, 2025 05:45 PM
ADDED : பிப் 09, 2025 01:35 PM

சென்னை: வேலூரில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிக்கு ரூ.3 லட்சம் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பூரில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் சென்ற 4 மாத கர்ப்பிணி, ஓடும் ரயிலில் பலாத்கார முயற்சியை எதிர்த்து போராடிய போது, ஹேமராஜ் என்பவர் ரயிலில் இருந்து வெளியே தள்ளியதில் அவரது கர்ப்பம் கலைந்தது. இந்த துயரமான செய்தியைக் கேட்டு வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டு உள்ளேன். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரேவதி அவர்களின் முழு மருத்துவச் செலவையும் தமிழக அரசே ஏற்கும். இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஹேமராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணியின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டு உள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

