செரிமான பிரச்னைக்கு தீர்வு: தீபாவளி லேகியம் அறிமுகம்
செரிமான பிரச்னைக்கு தீர்வு: தீபாவளி லேகியம் அறிமுகம்
ADDED : நவ 09, 2023 08:02 PM

சென்னை:தேசிய ஆயுர்வேத தினத்தையொட்டி, செரிமான பிரச்னைக்கு தீர்வு தரும் வகையில், 'டாம்ப்கால்' தயாரிப்பான தீபாவளி லேகியத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிமுகப்படுத்தினார்.
சென்னை அரும்பாக்கம், சித்தா மருத்துவமனை வளாகத்தில், தேசிய ஆயுர்வேத தினத்தையொட்டி, விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டது. தொடர்ந்து, 'டாம்ப்காலின்' புதிய தயாரிப்பான தீபாவளி லேகியத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
பின், அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
ஆயுர்வேத கண்காட்சியில், அன்றாட வாழ்க்கையில் நோய்கள் வராமல் காப்பது, உடலுக்கு சத்தான நவதானிய உருண்டை, மூலிகை தேநீர், கோதுமை லேகியம் போன்ற பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுஇருந்தன.
'டாம்ப்கால்' என்ற இந்திய மருத்துவ முறையின், மருந்து தயாரிப்பு மையம், இந்தியாவிற்கே வழிகாட்டும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. அதன்கீழ் தயாரிக்கப்பட்ட செரிமானத்திற்கு உதவும் தீபாவளி லேகியம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.