'தமிழகம் வஞ்சிக்கப்படுவதை மக்களிடம் நினைவுபடுத்துங்கள்!'
'தமிழகம் வஞ்சிக்கப்படுவதை மக்களிடம் நினைவுபடுத்துங்கள்!'
ADDED : பிப் 03, 2024 01:41 AM
சென்னை:'முழுமையான படஜெட்டை அடுத்த பார்லிமென்ட் கூட்டத்தொடரில், 'இண்டியா' கூட்டணி அரசு தாக்கல் செய்யும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
ஸ்பெயின் நாட்டில், தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கிற வகையிலான சந்திப்புகளும், அதன் தொடர்ச்சியாக, புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், பயணத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறுகின்றன.
வரும் லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியா முழுமைக்குமான வெற்றி வியூகத்தை வகுக்க வேண்டிய பொறுப்பு நிறைந்த இடத்தில் இருக்கிறது தி.மு.க.,
'மக்களிடம் செல்; மக்களிடம் சொல்' என, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை, மக்களிடம் சொல்லுங்கள். ஒவ்வொரு தி.மு.க., குடும்பத்தைச் சேர்ந்தோரும், தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை, மக்களிடம் சொல்லுங்கள்.
ஒவ்வொரு குடும்பமும், தி.மு.க., ஆட்சியின் சாதனைகளால் பெற்றிருக்கும் பயன்களை உணர்த்துங்கள். மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பதை நினைவுப்படுத்துங்கள்.
கடந்த லோக்சபா தேர்தலை விடவும், கூடுதலான உழைப்பை வழங்கி, கூடுதலான ஓட்டு வித்தியாசத்தில் கடந்த முறை மிச்சம் வைத்த ஒற்றை தொகுதியையும் சேர்த்து, நாற்பதுக்கு நாற்பது என்ற முழு வெற்றியை கூட்டணிக்காக உறுதி செய்யுங்கள்.
அந்த இலக்கை தி.மு.க., நிச்சயம் அடைந்து விடும் என்கிற நம்பிக்கை, அறிவாலயத்தில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடனான சந்திப்பின் போது, நிர்வாகிகள் காட்டும் உற்சாகத்தில் இருந்து புலப்படுகிறது.
அந்த உற்சாகம், தேர்தல் களப்பணிகளிலும் குன்றாமல் குறையாமல் வெளிப்பட வேண்டும். மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழகம் உட்பட, பல மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளன.
முழுமையான பட்ஜெட்டை, அடுத்த பார்லிமென்ட் கூட்டத்தொடரில், 'இண்டியா' கூட்டணி அரசு தாக்கல் செய்யும். மாநிலங்களின் நலன்களும், உரிமைகளும் அப்போது கண்டிப்பாக பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

