ADDED : டிச 01, 2024 02:40 AM
உலகம் விரைவான வேகத்தில் நகர்கிறது, மேலும் நம்மில் பலர் மனிதனாக இருப்பதன் மிக முக்கியமான சில அம்சங்களை மறந்துவிடுகிறோம். சுயநலம் மற்றும் பண பேராசையால், நம் தேவைக்காக சுற்றுச்சூழலை எவ்வளவு சுரண்டுகிறோம் என்பதையும் மறந்து விடுகிறோம்.
முன்னெப்போதும் இல்லாத அளவு இயற்கை வளங்களை அழிப்பதை நிறுத்துவதும், அதே நேரத்தில் நிலையான வளர்ச்சிக்கு செல்வதை உறுதி செய்வதும் காலத்தின் தேவை மற்றும் கட்டாயம்.
அதேசமயத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Renewable Energy) யின் தேவை மற்றும் பசுமையான மற்றும் கார்பன் -நடுநிலை செயல்பாட்டு வடிவத்துக்கு மாற முயற்சிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு வரவேற்கத்தக்க அறிகுறி. புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தும் போது, உற்பத்தி செய்யும் போது பெரும்பாலான வணிகங்களும், தனிநபர்களும் இதில் நிபுணத்துவத்தை கொண்டிருக்க மாட்டார்கள்.
இத் துறையில் ஆலோசனை நிறுவனமாக '.Kreate' நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் கொண்ட ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனமாக வளர்ந்து வருகிறது.
இதுதவிர மின்சாரத்தை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களையும், மின்சார தேவை உள்ளவர்களையும் இணைக்கும் ஒரு பாலமாகவும் இருக்கிறது. இவர்கள் நாட்டின் ஐந்து மின் கட்டப் பகுதிகள், அனைத்து மாநில மின்சார வாரியங்கள் / பயன்பாடுகளிலும் இணைந்து பணியாற்றுகின்றனர். மேலும், இந்தியன் எனர்ஜி எக்சேஞ்ச் (IEX) மற்றும் பவர் எக்சேஞ்ச் இந்தியா லிமிடெட் (PXIL) ஆகிய இரண்டிலும் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்.
புதுடில்லியை தலைமையிடமாகக் கொண்ட, '.கிரியேட்' பவர் டிரேடிங் துறையில் முதல் ஐந்து பெரிய நிறுவனங்களில் ஒன்று. மிகவும் துல்லியமான முன்னறிவிப்புகளை உருவாக்க AI, மெஷின் லேர்னிங் மற்றும் புள்ளி விவரங்களை உள்ளடக்கிய மேம்பட்ட டேட்டா பகுப்பாய்வு அல்காரிதம்களைப் பயன்படுத்துகிறது.
வாடிக்கையாளர்களின் போர்ட்போலியோவில் 1,500 மெகாவாட் காற்றாலை ஆலைகள், 900 மெகாவாட் சோலார் பிவி ஆலைகள் இருக்கின்றன. மற்றும் ஏறத்தாழ, 50 ஆயிரம் மெகாவாட் எனர்ஜி தேவை உள்ளது.
இந்நிறுவனம், இந்தியாவில் நிகழ்நேர மின் தீர்வு வழங்குவதில் முன்னணியில் உள்ளது. உள்நாடு, வெளிநாடுகளில் உள்ள பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பவர் டிரேடிங், எனர்ஜி சேமிப்பு சான்றிதழ் வர்த்தகம் மற்றும் ஆற்றல் மேலாண்மை ஆகிய துறைகளில் சேவைகளை வழங்குகிறார்கள். இதே நிறுவனம், REdFx போன்ற அதிநவீன கருவிகளை உருவாக்கியுள்ளது, இது ரியல் டைம் டாஷ்போர்டு மற்றும் மொபைல் ஆப் ஆகியவைகளின் உதவியால், சூரிய மற்றும் காற்றாலைகளின் எனர்ஜி தேவை, தேவைகளின் அளவு மற்றும் சூரிய/காற்று ஆலை உற்பத்தி டேட்டா ஆகியவற்றை கண்காணிக்க உதவுகிறது.
தொடர்புக்கு: www.kreateglobal.com, +91 11 66666999, info@kreateglobal.com.
சந்தேகங்களுக்கு: இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com. அலைபேசி: 98204 - 51259. இணையதளம் www.startupandbusinessnews.com
- சேதுராமன் சாத்தப்பன் -