புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி 20,724 மெகா வாட்டாக அதிகரிப்பு
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி 20,724 மெகா வாட்டாக அதிகரிப்பு
ADDED : நவ 28, 2024 01:09 AM
சென்னை:தமிழகத்தில் கடந்த மார்ச் நிலவரப்படி, காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை உள்ளடக்கிய ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிறுவு திறன், 20,724 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.
மின் தேவையை பூர்த்தி செய்வதில், சுற்றுச்சூழலை பாதிக்காத புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துமாறு, மாநில மின் வாரியங்களை, மத்திய அரசு அறிவுறுத்திஉள்ளது.
நாட்டில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, சாதகமான சூழல் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது.
இதனால் தமிழகத்தில் மார்ச் நிலவரப்படி, ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க மின் நிறுவு திறன், 20,724 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த ஆண்டில் 18,288 மெகா வாட்டாக இருந்தது. கடந்த ஓராண்டில் மட்டும் புதுப்பிக்கத்தக்க மின் நிறுவு திறன் கூடுதலாக, 2,436 மெகா வாட் அதிகரித்துள்ளது. அதில் அதிகளவாக காற்றாலை 276; சூரியசக்தி மின்சாரம் 1,956 மெகா வாட்டாகவும் உள்ளது.
தற்போது, அனல், அணு, எரிவாயு மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் என, அனைத்து வகை மின்சாரத்தையும் சேர்த்து, மாநிலத்தின் மொத்த நிறுவு திறன், 36,563 மெகா வாட்டாக உள்ளது. இது, கடந்த ஆண்டில், 34,706 மெகா வாட்டாக இருந்தது.