'நெய்லிங்' தொழில்நுட்பத்தில் திருச்சியில் பாலம் சீரமைப்பு
'நெய்லிங்' தொழில்நுட்பத்தில் திருச்சியில் பாலம் சீரமைப்பு
ADDED : ஜன 29, 2024 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி : திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பொன்மலை ரயில்வே ஸ்டேஷன் ஜீ கார்னர் அருகே, திருச்சி- - சென்னை மார்க்கத்தில் உள்ள பாலத்தில் ஜன., 11ம் தேதி இரவு பழுது ஏற்பட்டது.
ஐ.ஐ.டி., நிபுணர்களின் அறிக்கை அடிப்படையில், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், பாலம் சீரமைப்பு பணியை மேற்கொள்கின்றனர். மலைப்பகுதி சாலையில் மண்சரிவு ஏற்படாமல் இருக்க, நெய்லிங் என்ற தொழில்நுட்பம் பின்பற்றப்படுகிறது.
அதன்படி, பழுதான பாலத்தின் சாய்தளப் பகுதியில் கம்பிகள் சொருகப்பட்டு, கான்கிரீட் கலவை கொட்டும் பணி நடைபெறுகிறது.
அடுத்து, சிறு கம்பி வலைகளை வைத்து, கான்கிரீட் கலவையால் சாய்தளம் அமைக்கப்படும். அதன்பின், கான்கிரீட் பிளாக்குகளை கொண்டு சுவர் எழுப்பி, பாலம் சீரமைக்கப்படும் என, நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் தெரிவித்தனர்.