‛ரிப்பீட்டு... ரிப்பீட்டு...': கருணாநிதி காலம் முதல் ‛சாகாவரம்' பெற்ற தி.மு.க., வாக்குறுதிகள்
‛ரிப்பீட்டு... ரிப்பீட்டு...': கருணாநிதி காலம் முதல் ‛சாகாவரம்' பெற்ற தி.மு.க., வாக்குறுதிகள்
UPDATED : மார் 21, 2024 12:50 AM
ADDED : மார் 20, 2024 01:18 PM

சென்னை: கச்சத்தீவு மீட்கப்படும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி காலம் முதல் தி.மு.க., கூறி வருகிறது. அதே வாக்குறுதி ஸ்டாலின் இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளது. மேலும், திருக்குறள் தேசிய நூலாக்கப்படும், இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்பன உள்ளிட்டவை மீண்டும் மீண்டும் இடம்பெற்றுள்ளது.
சட்டசபை, லோக்சபா தேர்தலாக இருந்தாலும் கருணாநிதி காலம் முதல் பல வாக்குறுதிகள் இன்னமும் திமு.க.,வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று வரும் வினோதம் இந்த முறையும் நடந்துள்ளது.
அந்த வகையில்,
கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை முன்னிட்டு தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,
.
*இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை
*நீட் தேர்வு ரத்து
*மாணவர்களின் கல்விக்கடன் ரத்து உள்ளிட்டவை இடம்பெற்று இருந்தது.
அதேபோல், கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, அக்கட்சியின் வாக்குறுதிகளில்,
*மாநிலங்கள் சுயாட்சி பெற அரசியலமைப்பு சட்டத்தை திருத்தும்படி மத்திய அரசை வலியுறுத்துவோம்.
*மாநில ஆட்சிமொழிகளாக உள்ள, தேசிய மொழிகள் அனைத்தும், மத்திய ஆட்சிமொழிகளாக்க வலியுறுத்துவோம்.
*அனைத்து துறை பணியாளர் தேர்வுகளுக்கு, தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளிலும், எழுத்து மற்றும் நேர்முக தேர்வுகள் நடத்த முயற்சி
*திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க செய்வோம்.
*அகதிகள் முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு, இந்திய குடியுரிமை
*சேது சமுத்திர திட்டம் நிறைவேற முயற்சிப்போம்.
*கச்சத்தீவை திரும்ப பெறும் முயற்சிகள் மேற்கொள்வோம்.
*பெட்ரோல், டீசல் விலை குறைப்படும் எனக்கூறப்பட்டு இருந்தது
கடந்த லோக்சபா, சட்டசபை தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் ஸ்டாலின் இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கூறிய தேர்தல் வாக்குறுதிகள், அக்கட்சி மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பிறகும் இடம்பெற்றுள்ளது.

