வரைவு ஒட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு வரும் 25க்குள் கருத்துரு அனுப்ப வேண்டுகோள்
வரைவு ஒட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு வரும் 25க்குள் கருத்துரு அனுப்ப வேண்டுகோள்
UPDATED : அக் 19, 2026 06:20 PM
ADDED : அக் 19, 2026 06:18 PM
சேலம்: சேலம் மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிகளில், 3,468 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அதில் ஒமலுார், 362; இடைப்பாடி, 342; சங்ககிரி,339; ஏற்காடு, 336; மேட்டூர், 327; வீரபாண்டி, 312; சேலம் மேற்கு, 310; ஆத்துார், 306; சேலம் வடக்கு, 286; கெங்கவல்லி, 281; சேலம் தெற்கில், 268 ஓட்டுச்சாவடிகள் இடம் பெற்றுள்ளன.
ஒட்டுச்சாவடிகளை சீரமைத்தல், இடமாற்றம், பெயர் மாற்றம் செய்தல், புது ஒட்டுச்சாவடி உருவாக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ள வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல், நேற்று, 11 தொகுதிகளில், தனித்தனியே வெளியிடப்பட்டது. சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அலுவலர் பட்டியலை வெளியிட்டார்.
அதில், 1,200 ஒட்டுகளுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை கண்டறிந்து, 1,200 வாக்காளர் மிகாத வண்ணம், அதை பிரித்து ஓட்டுச்சாவடிகளை சீரமைக்கும் பணி, வரும், 26 வரை மேற்கொள்ளப்படுகிறது. எனவே, வாக்காளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் தங்களுடைய கோரிக்கை மற்றும் கருத்துருக்களை மாவட்ட தேர்தல் அலுவலர் அல்லது சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் வரும் 25க்குள் தெரியப்படுத்த வேண்டும். அப்பணி நிறைவு பெற்றதும், 2027 க்கான, வரைவு வாக்காளர் பட்டியல், வரும் நவ., 12ல் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
