தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கள்ளக்குறிச்சி கலெக்டரை மாற்ற கோரிக்கை

 கள்ளக்குறிச்சி கலெக்டரை மாற்ற கோரிக்கை

 கள்ளக்குறிச்சி கலெக்டரை மாற்ற கோரிக்கை


ADDED : மார் 17, 2026 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 01:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'கள்ளக்குறிச்சி கலெக்டரை மாற்ற வேண்டும்' என, தேர்தல் கமிஷனுக்கு அ.தி.மு.க., கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக, அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி துணை செயலர் பாபு முருகவேல், தேர்தல் கமிஷனுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த், பொறுப்பேற்ற நாளில் இருந்து அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுகிறார்.

கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில்குமாரை, அரசு நலத்திட்ட நிகழ்ச்சிக்கு கூட அழைக்காமல் இருந்தார்.

ஆனால், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை நிகழ்ச்சிக்கு அழை த்திருந்தார். இப்படி ஒருதலைபட்சமாக செயல்படும் கலெக்டரை, தேர்தல் அதிகாரியாக வைத்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தலை நியாயமாக நடத்த முடியாது. எனவே, அவரை உடனடியாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us