கட்கரியுடன் அன்புமணி சந்திப்பு சாலை பணிகள் குறித்து கோரிக்கை
கட்கரியுடன் அன்புமணி சந்திப்பு சாலை பணிகள் குறித்து கோரிக்கை
ADDED : பிப் 14, 2025 12:40 AM

சென்னை:மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை, டில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில், பா.ம.க., தலைவர் அன்புமணி சந்தித்து பேசினார்.
திண்டிவனம் - கிருஷ்ணகிரி இரு வழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் முதல் வாலாஜா வரையிலான பகுதியை, ஆறு வழிச்சாலையாக மாற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
சென்னை கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் முதல் செங்கல்பட்டு வரை, பறக்கும் சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
தொப்பூர் - பவானி தேசிய நெடுஞ்சாலையில், எருமப்பட்டி அருகே சுங்கச்சாவடி அமைக்கும் பணியை கைவிட வேண்டும். மேச்சேரி பேரூராட்சி பகுதியில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.
தர்மபுரி -- சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பாளையம்புத்துார் பிரிவு, சேஷம்பட்டி பிரிவு, தேவர் ஊத்துப்பள்ளம் பிரிவு, புறவடை, ஜாகீர் ஆகிய ஐந்து இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.
தர்மபுரி -- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், குண்டல்பட்டியில் அமைக்கப்படவுள்ள மேம்பாலத்தை, தர்மபுரியில் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அன்புமணி வலியுறுத்தினார்.

