கோவை - துாத்துக்குடி ரயில் மீண்டும் இயக்க கோரிக்கை
கோவை - துாத்துக்குடி ரயில் மீண்டும் இயக்க கோரிக்கை
ADDED : ஜூன் 28, 2025 07:12 PM
சென்னை:'கோவையில் இருந்து, சேலம், துாத்துக்குடிக்கு ரயில்கள் இயக்க வேண்டும்' என, தெற்கு ரயில்வேயின் ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினரான பாஷா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, அவர் அனுப்பியுள்ள மனு:
கோவையில் இருந்து ஈரோடு, மதுரை, துாத்துக்குடிக்கு பயணியர் அதிகம் செல்கின்றனர். அவர்களுக்கும், வியாபார ரீதியாக பொருட்களை எடுத்து செல்லவும், கூடுதல் ரயில் சேவை தேவைப்படுகிறது.
எனவே, கோவையில் இருந்து துாத்துக்குடிக்கு இயக்கப்பட்ட, 'லிங்க்' விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். அதேபோல, கோவையில் இருந்து சேலத்துக்கும் கூடுதல் ரயில் இயக்க வேண்டும்.
ஈரோடு ரயில் நிலையத்தில், தற்போது நான்கு நடைமேடைகளே இருப்பதால், ஜவுளி, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வதில், நடைமுறை சிக்கல் இருக்கிறது. அதனால், கூடுதல் நடைமேடை உருவாக்க வேண்டும்.
கன்னியாகுமரியில் இருந்து கோவை, சேலம், காட்பாடி, திருப்பதி வழியாக, புனேவுக்கு இயக்கப் படும் விரைவு ரயிலை, மும்பைக்கு நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.