ADDED : ஆக 12, 2025 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ராஜேந்திர சோழன் வரலாற்று மாநாட்டுக்கு, ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
சோழ மன்னர் ராஜேந்திர சோழனின் கடார வெற்றியின் 1,000மாவது ஆண்டை சிறப்பிக்கும் வகையில், சவுத் ஈஸ்ட் ஏசியா பல்கலை, அங்கோர் தமிழ்ச்சங்கம் சார்பில், ராஜேந்திர சோழன் வரலாற்று மாநாடை நடத்த திட்டமிட்டுள்ளன. நவ., 21 முதல் 26ம் தேதி வரை, அங்கோர்வாட் கோவில்களுக்கு அருகில் உள்ள சுற்றுலாத்தலமான சியிம்ரீப்பில், மாநாடு நடக்க உள்ளது.
மாநாட்டிற்கு, ஆய்வுக்கட்டுரைகள் அனுப்ப விரும்புவோர், angkorthamizhsangamtn@gmail.cogm என்ற மின்னஞ்சலுக்கு, செப்., 30ம் தேதிக்குள் அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு, 94899 02060, +855 81 412179 என்ற வாட்ஸாப் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.