தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இளங்கலை பார்மசிஸ்ட் படிப்பு துவங்க ஆய்வு

 இளங்கலை பார்மசிஸ்ட் படிப்பு துவங்க ஆய்வு

 இளங்கலை பார்மசிஸ்ட் படிப்பு துவங்க ஆய்வு


ADDED : மார் 30, 2026 11:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 11:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: மதுரை, விருதுநகர், சிவகங்கை உட்பட 13 அரசு மருத்துவக்கல்லுாரிகளில் இளங்கலை பார்மசிஸ்ட் படிப்புகளை துவங்கும் சாத்தியக்கூறுகளை தமிழக அரசு ஆய்வு செய்துள்ளது.

சென்னை மருத்துவக் கல்லுாரி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், கோவை, கன்னியாகுமரி, திண்டுக்கல், தர்மபுரி ஆகிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் தற்போது டிப்ளமோ நர்சிங் உள்பட பல்வேறு பாரா மெடிக்கல் படிப்புகள் வழங்கப்படுகிறது. இக்கல்லுாரிகளில் தற்போது இளங்கலை பார்மசிஸ்ட் படிப்புகளை துவங்குவதற்கான சாத்தியக்கூறுகளை தமிழக அரசு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

கட்டுமானங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தலா 100 இடங்களுடன் கூடிய கல்லுாரிகள் துவங்கப்படஉள்ளன.

இதனால் நீட் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்க முடியாத மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லுாரிகளில் இளங்கலை பார்மசிஸ்ட் படிப்புகளை படிக்க முடியும். எதிர்காலத்தில் அதற்கான இடங்களை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us