sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் ஒதுக்கீடு

/

மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் ஒதுக்கீடு

மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் ஒதுக்கீடு

மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் ஒதுக்கீடு


ADDED : ஜூன் 27, 2025 12:34 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக அரசு பதவி உயர்வில், மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில், போட்டியின்றி மாற்றுத்திறனாளிகளை தேர்ந்தெடுக்கதமிழக அரசு வழி செய்தது. இந்நிலையில், அரசு பணியில் பதவி உயர்வில், 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, மாற்றுத்திறனாளி சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு, பதவி உயர்வில், 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை பிறப்பித்துள்ளது.

அரசாணையில் கூறியிருப்பதாவது:

அரசு பணிகளில் பதவி உயர்வின்போதும், பணியிட மாறுதலின் போதும், மாற்றுத்திறனாளிகளுக்கு, 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.

இதில் பார்வை மாற்றுத்திறனாளிகள், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், பெருமூளை வாதம், தசைநார் சிதைவு, ஆட்டிசம், பிற மாற்றுத்திறனாளிகள் என, ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

- -- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us