பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தயார்; மல்லை சத்யா
பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தயார்; மல்லை சத்யா
ADDED : ஏப் 20, 2025 03:20 PM

சென்னை: ம.தி.மு.க., நலனுக்கு எதிராக எந்த இடத்திலும் நான் செயல்பட வில்லை. பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தயார் என்று அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா அறிவித்துள்ளார்.
ம.தி.மு.க.,வில் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, முதன்மை செயலாளர் துரை வைகோ இடையே எழுந்த அதிகார யுத்தம் காரணமாக தமது முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ தாமாகவே விலகுவதாக அறிவித்தார். மகனின் இந்த விலகல் அறிவிப்பை தொலைக்காட்சி பார்த்தே தெரிந்து கொண்டதாக வைகோ கூறினார்.
இப்படிப்பட்ட சூழலில் கட்சியின் நிர்வாகக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெரும்பான்மையான நிர்வாகிகள் துரை வைகோவுக்கு ஆதரவு தெரிவித்தும், ராஜினாமா முடிவை திரும்ப பெறுமாறு வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதேசமயத்தில் கூட்டத்தில் பேசிய மல்லை சத்யா. பதவியில் இருந்து விலக தயார் என்று கூறியுள்ளார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:
துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யத்தயார். கட்சி நிர்வாகிகளிடம் வாக்கெடுப்பு நடத்தி தன்னை கட்சியை விட்டு விலக்கி வைத்து விடுங்கள். கடைசி வரை வைகோவின் தொண்டனாக இருந்து விட்டு போகிறேன்.
இவ்வாறு மல்லை சத்யா பேசியதாக தெரிகிறது.