ADDED : ஜூலை 10, 2026 05:31 AM

சென்னை: த.வெ.க., அரசுக்கு ஆதரவளித்த, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர், தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.,வில் இணைந்தனர்.
கொறடா உத்தரவை மீறி, த.வெ.க., அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்ததால், கட்சி தாவல் தடை சட்டத்தின்படி, அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி, அ.தி.மு.க., கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சபாநாயகரிடம் மனு அளித்தார்.
அந்த மனு நிலுவையில் இருக்கும் நிலையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களின் ராஜினாமா ஏற்கப்பட்டதை எதிர்த்து, அ.தி.மு.க., சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த, பெருந்துறை ஜெயகுமார், தாராபுரம் சத்தியபாமா, மதுராந்தகம் மரகதம் குமரவேல் ஆகியோர் நேற்று சபாநாயகரை, தலைமைச் செயலகத்தில், அவரது அறையில் சந்தித்தனர். அப்போது, ராஜினாமா செய்தது குறித்து, எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தனர்.
