டாஸ்மாக் பணியாளருக்கு ஷிப்ட் பணி மாநில மாநாட்டில் தீர்மானம்
டாஸ்மாக் பணியாளருக்கு ஷிப்ட் பணி மாநில மாநாட்டில் தீர்மானம்
ADDED : அக் 02, 2024 11:36 PM
தஞ்சாவூர்:தஞ்சாவூரில் ஏ.ஐ.டி.யூ.சி., டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பெரியசாமி தலைமை வகித்தார்.
மாநாட்டை ஏ.ஐ.டி.யூ.சி., தேசிய செயலர் மூர்த்தி துவக்கி வைத்து உரையாற்றினார்.
கடந்த 23 ஆண்டுகளாக டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்
கேரளாவில் அமலில் உள்ளது போல, மதுபான கடைகள் நிர்வாக நடைமுறையை தமிழகத்திலும் டாஸ்மாக் நிறுவனம் அமல்படுத்த வேண்டும்
டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருக்கும் மருத்துவ திட்டத்தை கைவிட்டு, அனைத்து பணியாளர்களுக்கும் இ.எஸ்.ஐ., மருத்துவ திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
டாஸ்மாக் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ளதைப் போன்று 60 வயதாக அறிவிக்க வேண்டும்
டாஸ்மாக் பணியாளர்களுக்கு எட்டு மணி நேர வேலையை உத்தரவாதப்படுத்த வேண்டும்; ஷிப்ட் முறையை அமல்படுத்த வேண்டும்
டாஸ்மாக் பணியாளர்கள் தாக்கப்படுவதும், வருவாய் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமூகவிரோத சக்திகளிடமிருந்து பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
டாஸ்மாக் பணியாளர்களுக்கு துன்பம் விளைவிப்பவர்கள் பிணையில் வர முடியாத வகையில் வழக்கு பதிய வேண்டும்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 40 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.
இதுபோன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, அடுத்த ஆண்டு பிப்., 11ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என, பணியாளர்கள் அறிவித்தனர்.