ADDED : ஜன 28, 2026 08:01 AM
சென்னை: 'சவாரி, பந்தயம், திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் குதிரைகளை, தமிழக விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை, கால்நடைத் துறை செயலர் சுப்பையன் வெளியிட்டுள்ளார்.
குதிரைகளை பாதுகாக்க தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை:
பயணியர் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, சவாரி, பந்தயம், திருமண நிகழ்ச்சி போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் குதிரைகளை, விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும்.
குதிரைகளின் சுரப்பிகளை பரிசோதனை செய்து, அதன் அறிக்கை, நல வாரிய த்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். குதிரை உரிமையாளர்கள், உள்ளாட்சியிடம் உரிமம் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
