ADDED : ஜூலை 31, 2025 01:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'ஓய்வூதிய திட்டத்தை, புதுப்பித்து நீட்டிக்க வேண்டும்' என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஓய்வூதிய கூட்டமைப்பு சார்பில், நேற்று சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் தர்ணா போராட்டம் நடந்தது.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள், 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 'ஓய்வூதிய திட்டத்தை புதுப்பித்து நீட்டிக்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை உயர்த்த வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.

