UPDATED : நவ 05, 2026 11:51 PM
ADDED : நவ 04, 2026 06:10 PM

பெரம்பலுார்: பெரம்பலுாரில், ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஒருவர், சாலையை சுத்தம் செய்து, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு உதவி வருகிறார்.
பெரம்பலுார் நகராட்சி அலுவலக பின்புறம் உள்ள பகுதியில் வசிப்பவர் பாலு, 57. இவர், வி.களத்துார் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன், விருப்ப ஓய்வு பெற்றார்.
பணிகாலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக போலீஸ் உயரதிகாரிகளால் பலமுறை பாராட்ட பெற்றதுடன், பரிசுத் தொகையும் பெற்றுள்ளார். பாலு காலை, மாலை, இரு வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
அதன்பின், பெரம்பலுார் நகரில் சாலைகளில் சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்கள், சாலை ஓரங்களில் குவிந்திருக்கும் மண் ஆகியவற்றை கூட்டி சுத்தம் செய்யும் பணியை செய்து வருகிறார். இவர் சுத்தம் செய்யும் போட்டோ, சமூக வலைதளங்களில் பரவி, பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
